/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 31, 2025 01:48 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த. அய்யர்மலை அரசு கலை கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு குழு மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசன் வரவேற்றார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கரூர் உதவி ஆணையர் கருணாகரன், மனநல மருத்துவர் பாரதிகார்த்திகா, சமூக நல பணியாளர் மகேஸ்வரி, குளித்தலை கோட்ட கலால் அலுவலர் செந்தில் ஆகியோர், போதை தடுப்பு குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தனர்.
ஏற்பாடுகளை போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைரமூர்த்தி, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
விலங்கியல் துறை தலைவர் பாபுநாத் நன்றி கூறினார்.