/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் வீணாக கடலுக்கு செல்லும் நீர்
/
அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் வீணாக கடலுக்கு செல்லும் நீர்
அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் வீணாக கடலுக்கு செல்லும் நீர்
அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் வீணாக கடலுக்கு செல்லும் நீர்
ADDED : அக் 20, 2024 04:13 AM
கரூர்: அமராவதி அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்படும் போது, அதை சேமித்து வைக்க, கரூர் மாவட்டத்தின் ஆற்றுப் பகுதி-களில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள, அமராவதி அணை நீர்மட்டம், 90 அடி. கேரளா மாநிலம் மற்றும் உப நதிக-ளான சண்முகா நதி, குதிரை ஆறு, உப்பாறு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் செல்கி-றது. பருவமழை காரணமாக, கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அமரா-வதி அணை நிரம்பும் நிலையில், ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலுார் பகுதியில், காவிரியாற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதியில், தடுப்பணைகளை கட்ட வேண்டும். கிளை வாய்கால்களை முழுவதுமாக துார் வார வேண்டும் என, விவசா-யிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, குடிநீர், கால்நடை-களுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், வறட்சியான காலங்களில் அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயர்ந்தால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவன பயிர் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.
இதற்கு ஒரே தீர்வு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணை-களை கட்டுவதுதான் சிறந்தது. உபரி நீர் செல்லும் போது, கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகளில் சேமிக்க முடியும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதை பயன்படுத்தி, விவசாயிகள் வறட்சி காலங்களை சமாளிக்கலாம்.
பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு, அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, பெரிய ஆண்டாங்கோ-விலில் தடுப்பணை கட்டியுள்ளனர். அதே போல், ராஜபுரம் உள்-ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும். போதிய தடுப்பணைகள் இல்லாததால், கடந்த மூன்று மாதங்களாக அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வீணாக காவிரியாற்றின் வழியாக கடலுக்கு செல்வது அதிர்ச்சியாக உள்ளது.
இவ்வாறு கூறினர்.