/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கும்பமேளா காரணமாக வரத்து குறைவு ஜெட் வேகத்தில் உருளை கிழங்கு விலை
/
கும்பமேளா காரணமாக வரத்து குறைவு ஜெட் வேகத்தில் உருளை கிழங்கு விலை
கும்பமேளா காரணமாக வரத்து குறைவு ஜெட் வேகத்தில் உருளை கிழங்கு விலை
கும்பமேளா காரணமாக வரத்து குறைவு ஜெட் வேகத்தில் உருளை கிழங்கு விலை
ADDED : பிப் 16, 2025 03:42 AM
கரூர்: கும்ப மேளா காரணமாக, வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து வருகிறது.
நாட்டில், உருளை கிழங்கு உற்பத்தியில் உத்திர பிரதேசம், மேற்கு வங்க மாநிலம் முன்னணியில் உள்ளது. அதை தவிர, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், உருளை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மலைப்பகுதிகளில், உருளை கிழங்கு சாகுபடி நடக்கிறது. இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில், வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு அதிகளவில் தமிழகத்துக்கு வந்தது. இதனால், கிலோ உருளை கிழங்கு, 30 ரூபாய் வரை விற்றது.
ஆனால், கும்பமேளா மற்றும் டெல்லி சட்டசபை தேர்தல் கார-ணமாக, உத்திர பிரதேசம் உள்ளிட்ட, வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு, தமிழகத்துக்கு வருவது குறைந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் தற்போது அறுவடை தாமதம் ஆன நிலையில், உருளை கிழங்கு வரத்து கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு மேலும் குறைந்-துள்ளது. இதனால், விலை கணிசமான அளவில் அதிகரித்துள்-ளது.
இதுகுறித்து, உருளை கிழங்கு வியாபாரிகள் கூறியதாவது:
கும்பமேளா காரணமாக, வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு வரத்து குறைந்துள்ளது. தற்போது வரத்து குறைவு காரண-மாக, ஒரு கிலோ, 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு, இதே சீசனில் கிலோ உருளை கிழங்கு, 20 ரூபாய் முதல், 25 ரூபாயாக இருந்தது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.