/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எழுநுாற்று மங்கலம் கிராமத்தில் நாடக மேடைக்கு பூமி பூஜை
/
எழுநுாற்று மங்கலம் கிராமத்தில் நாடக மேடைக்கு பூமி பூஜை
எழுநுாற்று மங்கலம் கிராமத்தில் நாடக மேடைக்கு பூமி பூஜை
எழுநுாற்று மங்கலம் கிராமத்தில் நாடக மேடைக்கு பூமி பூஜை
ADDED : செப் 04, 2025 01:25 AM
குளித்தலை :குளித்தலை அடுத்த, மணத்தட்டை பஞ்., எழுநுாற்று மங்கலம் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ரூ. 6 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
தி.மு.க., ஒன்றிய துணை செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் சந்திரன், மாஜி யூனியன் கவுன்சிலர் சாந்த ஷீலா விஜயகுமார், நகர செயலர் சுப்பிரமணி, ரவீந்திரன், யூனியன் கமிஷனர் விஜயகுமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அரசின் சாதனைகளை எடுத்து கூறி, எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.