தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இன்று கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்

இன்று கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்

இன்று கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 17, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் கலெக்டர் பிரசன்னா ராமசாமி வெளியிட்ட அறிக்கை:

கரூர் அருகே, தாளப்பட்டி என்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் விழிப்புணர்வு மற்றும் கல்விக்கடன் வழங்கும் விழா, இன்று நடக்கிறது.

நிகழ்ச்சியில், உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வங்கி மூலம் எளிதில் கல்விக்கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, தகுதியான மாணவர்களுக்கு கல்விக்கடன்களும் வழங்கப்படவுள்ளன.மாணவர்கள், https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான விபரங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தங்களுக்கு விருப்பமான வங்கி மற்றும் வங்கி கிளையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. மேலும், தேவைப்படும் ஆவணங்களை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்தின் நிலையை இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கண்காணிக்கலாம். விபரங்களுக்கு, 94426-13165, 04324-234817 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us