/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் 5,061 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
/
மாவட்டத்தில் 5,061 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
மாவட்டத்தில் 5,061 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
மாவட்டத்தில் 5,061 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : செப் 27, 2025 01:15 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், 2025-26ம் கல்வியாண்டில், 5,061 பேருக்கு, 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த, கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் நடப்பு ஆண்டில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கரூரில் நடந்த விழாவில், வங்கி பற்று அட்டைகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
பின், அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், 48 கல்லுாரி களில், 4,151 மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தில், இதுவரை, 14.55 கோடி ரூபாய்- உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழ் புதல்வன் திட்டத்தில், 42 கல்லுாரிகளில், 4,522 மாணவர்களுக்கு இதுவரை, 5.42 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2025--26 கல்வியாண்டில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 48 கல்லுாரியின், 2,845 மாணவியர், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், 42 கல்லுாரியில், 2,216 மாணவர்கள் என, மொத்தம், 5,061 பேருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
விழாவில், மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி, அரசு கலை கல்லுாரி முதல்வர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.