/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போட்டி தேர்வு வெற்றிக்கு முயற்சியும் பயிற்சியும் அவசியம்; கரூர் கலெக்டர்
/
போட்டி தேர்வு வெற்றிக்கு முயற்சியும் பயிற்சியும் அவசியம்; கரூர் கலெக்டர்
போட்டி தேர்வு வெற்றிக்கு முயற்சியும் பயிற்சியும் அவசியம்; கரூர் கலெக்டர்
போட்டி தேர்வு வெற்றிக்கு முயற்சியும் பயிற்சியும் அவசியம்; கரூர் கலெக்டர்
ADDED : ஏப் 27, 2025 04:18 AM
கரூர்: ''போட்டி தேர்வு வெற்றிக்கு முயற்சியும், பயிற்சியும் ஒன்றி-ணைவது அவசியமாகும்,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4(வி.ஏ.ஓ.,) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து பேசியதாவது:போட்டி தேர்வு என்பது பள்ளி, கல்லுாரி தேர்வு போன்றதல்ல. அவ்வப்போது பாடத்திட்டத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்-தாற்போல் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நானும், குரூப் -4, குரூப் -2, குரூப் -1 என்று படிப்படியாக போட்டித்தேர்வு எழுதி, கரூர் கலெக்டராக பணியாற்றி வருகிறேன். இப்பயணம் இத்துடன் நின்று விடாமல் தொடர்ந்து உயர் பதவிக்கு வரும் வகையில் உங்களது முயற்சி இருக்க வேண்டும்.
போட்டி தேர்வு வெற்றி என்பது முயற்சியும், பயிற்சியும் ஒன்றி-ணைவது அவசியமாகும். போட்டி தேர்வு பாடங்களை தொடர்ந்து படிப்பதோடு, ஆழ்ந்து படிக்க வேண்டும். உங்களது பலம், பலவீனம், வாய்ப்பு, சவால்களை அறிந்து பாடப்பகுதி-யினை நன்குபுரிந்து படியுங்கள். மனதை அறிவால் நிரப்பி, பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். மாதிரி தேர்வினை தொடர்ந்து பயிற்சி செய்து, பயம் தவிர்த்து குழு உரையாடல் மூலம் பாடங்களை பகிர்ந்து, மனதினுள் உள்வாங்கி தயார் செய்-யுங்கள்.
இவ்வாறு, பேசினார்.
மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், வருமான வரி ஆய்-வாளர் கார்த்திக், மாவட்ட மைய நுாலக நுாலகர் மேரிரோசரி-சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

