/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி தீவிரம்
ADDED : ஏப் 25, 2025 01:25 AM
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்திரிக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புதுப்பட்டி, பஞ்சப்பட்டி, மலையாண்டிப்பட்டி, சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள், கிணற்று நீர் பாசன முறையில் கத்திரிக்காய் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது விளைந்த காய்களை பறித்து கரூர், திருச்சி மற்றும் உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கத்திரிக்காய் கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரிக்காய் சாகுபடி காரணமாக, விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.