/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்திரிக்காய் விலை சரிந்து விற்பனை
/
கத்திரிக்காய் விலை சரிந்து விற்பனை
ADDED : ஜூலை 11, 2025 01:13 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் விலை சரிந்து விற்பனையானது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், கோவக்குளம், தொட்டியப்பட்டி, புதுப்பட்டி, புனவாசிப்பட்டி, கண்ணமுத்தாம்பட்டி, வீரியபாளையம், லட்சுமணம்பட்டி, மத்திப்பட்டி, கணக்கம்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம், வேப்பங்டி, கந்தன்குடி ஆகிய பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.
தற்போது செடிகளில் இருந்து, கத்திரிக்காய்கள் பறிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் கரூர், குளித்தலை, தோகைமலை, முசிறி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு
கொண்டு செல்லப்பட்டு விவசாயிகள் விற்று வருகின்றனர்.
கடந்த மாதம் கத்திரிக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிந்துள்ளது. நேற்று கத்திரிக்காய் கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது.