/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் விலை உயர்வு
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் விலை உயர்வு
ADDED : அக் 09, 2025 12:46 AM
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் பகுதியில், கத்திரிக்காய் விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, மலையாண்டிப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கொம்பாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
கடந்த மாதம் கத்திரிக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது. தற்போது விலை உயர்ந்து கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரூர், குளித்தலை, தோகைமலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி மண்டிகளுக்கு, கத்திரிக்காய்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.