/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., தலைவர் விஜய் வரும் 13ல் கரூர் வருகை?
/
த.வெ.க., தலைவர் விஜய் வரும் 13ல் கரூர் வருகை?
ADDED : அக் 09, 2025 12:47 AM
கரூர் :த.வெ.க., தலைவர் விஜய் வரும், 13ல் கரூர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, த.வெ.க., சார்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை விஜய் கரூர் வரவில்லை. நேற்று முன்தினம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன், விஜய் வீடியோகால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.மேலும், கரூர் வருவதற்கு போலீசார் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு நேற்று முன்தினம், சென்னையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்துக்கு த.வெ.க., சார்பில் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதை பரிசீலித்த டி.ஜி.பி., அலுவலகம், கரூர் எஸ்.பி.,யை சந்தித்து, அனுமதி மற்றும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
இதனால், இன்று அல்லது நாளை த.வெ.க., மாநிலநிர்வாகிகள் சிலர், கரூர்
எஸ்.பி., யை சந்தித்து அனுமதி பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வரும், 13ல் த.வெ.க., விஜய், ெஹலி காப்டர் மூலம் கரூர் வந்து, தனியார் பள்ளி அல்லது திருமண மண்டபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி
வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.