/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
/
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : மே 27, 2025 01:27 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி பஞ்., சுக்காம்பட்டியில், பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பாதாள லிங்கேஸ்வர பெருமாள், அதர்வண பத்ரகாளியம்மன், துர்க்கை அம்மன், விநாயகர், முருகன் சிலைகள் கொண்ட கோவில் கட்டப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக, 21 அடி உயர பிரம்மாண்ட பதினெட்டாம்படி கருப்பணசாமி சிலையானது, பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் கொண்டு வரப்பட்டு யாக வேள்வி சாலையில் வைத்து, சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை நடத்தினர்.
நேற்று முன்தினம் காலை, சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.