/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு
/
மொபட் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : செப் 09, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், க.பரமத்தி அருகே மொபட் மீது, கார் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பழங்கநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன், 61. இவர் கடந்த, 6ம் தேதி இரவு கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, க.பரமத்தி அருகே பவர் கிரிடு
பகுதியில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த விக்னேஷ், 45, என்பவர் ஓட்டி சென்ற கார், மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த ஜெயராமன் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து, ஜெயராமனின் மருமகன் பாலகிருஷ்ணன், 37, போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.