/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர் தவறி விழுந்து பலி
/
படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர் தவறி விழுந்து பலி
படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர் தவறி விழுந்து பலி
படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர் தவறி விழுந்து பலி
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 52; இவர் கடந்த, 6ல் வீட்டு படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்த சுப்பிரமணிக்கு தலையின் பின்பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் சுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து, சுப்பிரமணியத்தின் மனைவி லலிதா, 49, கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.