/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி
/
பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி
ADDED : அக் 23, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் புஞ்சைகாளக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி, 60. இவர், நேற்று முன்தினம் நொய்யல் - க.பரமத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, கிரஷர் மேடு அருகில் எதிரே வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.