/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் மோட்டார் சுவர் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்
/
மின் மோட்டார் சுவர் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்
மின் மோட்டார் சுவர் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்
மின் மோட்டார் சுவர் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : டிச 09, 2024 07:03 AM
கரூர்: கரூர் - வாங்கல் சாலை, அண்ணா வளைவு பகுதியில், மாநகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன், போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். போர்வெல்லில் இருந்து டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற மின் சுவிட்ச் பெட்டி மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிறிய அளவில் அறை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
தற்போது, அந்த அறையின் சுவர் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தற்போது, கரூர் நகரில் பெய்த மழையால், மின் மோட்டார் சுவர் சேதமடைந்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், கரூர் மாநகராட்சி நிர்வாகம் மின் மோட்டார் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.