/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோட்டத்தில் மின் மோட்டார் ஒயர் திருட்டு
/
தோட்டத்தில் மின் மோட்டார் ஒயர் திருட்டு
ADDED : ஆக 06, 2024 02:27 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கல்லடை பகுதியை சேர்ந்த ராஜசேகர், 27, திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆடி 18 பண்டிகையை, குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ராஜசேகர் திருப்பூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்தார்.
கடந்த, 3ல் தனது தோட்டத்திற்கு சென்று அங்கு சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். மீண்டும், மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்து, மின் மோட்டாரை இயக்குவதற்காக போர்வெல் பம்ப் செட்டிற்கு சென்றார். அப்போது, மின் மோட்டாரில் பொருத்தப்பட்டு இருந்த ஒயர்கள் அறுத்து திருட்டு போனது
தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.