/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
கரூர் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 12, 2025 07:18 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை முதல் பல கட்டங்களாக நடக்கிறது என, கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில், கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (13ம் தேதி) காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும், 20 காலை, 11:00 மணிக்கும், கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் (கிராமியம்) அலுவலகத்தில் வரும், 27 காலை, 11:00 மணிக்கும் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அந்தந்த பகுதி மின்நுகர்வோர்கள் பங்கேற்று, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.