/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மின் ஊழியர்கள் பேரணி
/
அரவக்குறிச்சியில் மின் ஊழியர்கள் பேரணி
ADDED : டிச 22, 2024 01:17 AM
அரவக்குறிச்சி, டிச. 22-
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கரூர் மின் பகிர்மான வட்டம், கரூர் கிராம கோட்டத்திற்கு உட்பட்ட, அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில், மின் சிக்கன வார விழா பேரணி நடைபெற்றது.
எம்.எல்.ஏ., இளங்கோ கொடியசைத்து துவக்கி வைத்தார். மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மின்வாரிய பணியாளர்கள் மூலம் எடுத்துக் கூறப்பட்டது. பேரணி மின்வாரிய அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியாக அரவக்குறிச்சி பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்பியது.
கரூர் மேற்பார்வை பொறியாளர் சிவகுமார், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மணி, கிராம கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், மின்வாரிய பணியாளர்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.