/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தொடக்கம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தொடக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தொடக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தொடக்கம்
ADDED : டிச 12, 2025 08:45 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பாதுகாப்பு கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணியை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில், 2024 லோக்பசா தேர்தலில் பயன்படுத்தப்-பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இதில், 4,855 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1,486 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி, 1,618 வி.வி.பேட் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. நல்ல நிலையில் உள்ள, மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து கொண்டும், குறைபாடுகள் உள்ள இயந்திரங்களை தனியாக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.