/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதியின்றி மார்க்கெட் திறப்பு மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்
/
அடிப்படை வசதியின்றி மார்க்கெட் திறப்பு மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்
அடிப்படை வசதியின்றி மார்க்கெட் திறப்பு மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்
அடிப்படை வசதியின்றி மார்க்கெட் திறப்பு மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்
ADDED : டிச 12, 2025 08:45 AM
கரூர்: கரூரில், அடிப்படை வசதிகள் இன்றி மார்க்கெட் திறக்கப்பட்-டதால், மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்-ளது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காமராஜ் தினசரி மார்க்கெட் கடந்த, 1947ல் அமைக்கப்பட்டது. அதில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், வியாபாரிகள் புதிய கட்டடம் கட்டி தரும்படி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்-தனர்.
கடந்த 2022 மே, 17ல், 6.75 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதையடுத்து பழைய கடைகள் இடிக்கப்பட்டு, 174 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மளிகை கடை, பழக்கடை, இறைச்சி, டீக்கடைகள் உள்-ளிட்ட பல்வேறு வகையான கடைகள் அமைக்க வசதி செய்யப்-பட்டுள்ளது. கடந்த ஜூலை, 9ல் துணை முதல்வர் உதயநிதி, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பின், டெண்டர் விடும் பணி தொடங்கும் போது, வணிக வளாகத்தை சென்று பார்த்த வணிகர்கள் அதிர்ச்சி-யடைந்தனர். அங்கு போதிய வெளிச்சம், காற்று வசதியில்லை. மேலும் வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. இதுபோல பல்வேறு குறைபாடுகளை உள்ளதால், டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதற்கிடையில், மார்க்கெட் வளாகம் எதிரில் வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் முன்பே, இதுபோன்ற வசதிகளை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததால், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்-டுள்ளது. தற்போது திறப்பு விழா நடந்து, 4 மாதங்களை கடந்த நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. உடனடி-யாக திறந்தால், பல்வேறு சிக்கல் தீர்வதோடு, மாநகராட்சிக்கு வருமானம் வரும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கரூர் மாநகராட்சி வருவாய் உதவி அலுவலர் ரகுபதி கூறுகையில்,''பார்க்கிங் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்-டுள்ளன. இரண்டு முறை டெண்டர் விடப்பட்டு, யாரும் கடை ஏலம் எடுக்க முன்வரவில்லை. வரும், 15ல் டெண்டர் விடப்பட-வுள்ளது,''
என்றார்.

