/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செயலிழந்து கிடக்கும் அவசர இலவச அழைப்பு
/
செயலிழந்து கிடக்கும் அவசர இலவச அழைப்பு
UPDATED : நவ 08, 2024 04:25 AM
ADDED : நவ 08, 2024 01:20 AM
கரூர் : பைபாஸ் சாலையில், செயலிழந்து கிடக்கும் அவசர இலவச அழைப்புகளால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூரில் இருந்து -மதுரை, சேலம் மற்றும் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இங்கு, தினமும் விபத்து நடத்து வருகிறது. இதற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக, தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்காங்கே இலவச அழைப்புக்கான டெலிபோன் வசதி செய்யப்பட்டிருந்தன.
சிறிது காலம் வரை செயல்பட்ட இலவச அழைப்புகள், நாளடைவில் செயலிழந்து விட்டது. அவசர உதவிக்கு பேச முடியாத நிலை உள்ளது. தற்போது முற்றிலும் சேதமடைந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அவசர தேவையை கருத்தில் கொண்டு, இலவச அழைப்புகளை செயல்
படுத்த வேண்டும்.

