/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லஞ்சம் பெற்ற பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை
/
லஞ்சம் பெற்ற பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : டிச 16, 2025 05:01 AM
கரூர்: திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜு. இவர், கரூர் மாவட்டம், குளித்தலை நெய்தலுாரில் புதிதாக மின் கம்பம் அமைக்க கோரி, 2011 ஆக., 9ல், சின்னபனையூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, மின் வாரிய உதவி பொறியாளராக பணிபுரிந்த நாராயணன், மின் கம்பம் அமைப்பதற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சுந்தர்ராஜு, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரையின்படி, 2,000 ரூபாயை சுந்தர்ராஜு, வழங்கியபோது, அதை பெற்ற நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நாராயணனுக்கு, மூன்றாண்டு சிறை விதித்து, நீதிபதி இளவழகன் நேற்று தீர்ப்பளித்தார்.

