/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் ஆங்கில புத்தாண்டு விழா
/
குளித்தலையில் ஆங்கில புத்தாண்டு விழா
ADDED : ஜன 02, 2026 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை பகுதியில் ஆங்கில புத்தாண்டு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.குளித்தலை முத்து பூபால சமுத்திரம் மாரியம்மன் கோவிலில், நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், நீலமேக பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், சிவாயம் சிவபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் பக்-தர்கள் சுவாமி
தரிசனம் செய்து வழிபட்டனர்.

