/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொலை வழக்கு நீதி கேட்டு சுற்றுச்சூழல் இயக்கம் மனு
/
கொலை வழக்கு நீதி கேட்டு சுற்றுச்சூழல் இயக்கம் மனு
ADDED : பிப் 20, 2024 12:20 AM
கரூர்:'கல்குவாரி பிரச்னையில், விவசாயி ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
மனுவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரியை மூட வைத்ததால், விவசாயி ஜெகநாதன் என்பவர், 2022ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
கொலை நடந்து, 17 மாதங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்கவில்லை.
மேலும், உள்ளூர் போலீசார் கொலை குற்றவாளிகளுக்கு சாதகமாக நடப்பதால், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதுவரை, ஜெகநாதன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கை பலமுறை முன்வைத்தும், அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இயற்கை வளங்களை பாதுகாக்க போராடியவருக்கு, இழப்பீடு தராதது நியாயமற்ற செயலாகும். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

