ADDED : நவ 05, 2026 07:02 AM

அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே உள்ள ஈசநத்தம் கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள்
துறை சார்பில், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மற்றும் ஆத்மா
திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி
வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருத்திகா தலைமை வகித்தார்.
கரூர் மாவட்ட வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்
கோமதி முன்னிலை வகித்தார். ஈசநத்தத்தில் உள்ள விவசாயிகளுக்கு,
காய்கறி பயிர்களில் நன்னெறி வேளாண் நடைமுறைகள் பற்றியும்,
முருங்கையில் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சியும்
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விவசாயிகள்
கலந்து கொண்டனர்.
