ADDED : நவ 05, 2026 07:02 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூரில் உள்ள ஓட்டல் ஒன்றில், நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.
கரூர்
- கோவை சாலை செங்குந்தபுரம் பிரிவு பகுதியில், அன்னம் என்ற பெயரில்
ஓட்டல் செயல்படுகிறது. அதன் சமையல் அறையில் நேற்று மதியம், 1:00
மணிக்கு ஊழியர்கள், உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எண்ணெய் சட்டியில் திடீரென தீ ஏற்பட்டது. இதனால் ஓட்டல்
மற்றும் கோவை சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டது.
அப்போது,
ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஓட்டலில் இருந்து வெளியேறினர்.
தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வடை சட்டியில்
ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால், செங்குந்தபுரம் பிரிவில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.
