ADDED : நவ 05, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, வட மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளியை காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஓடிசா
மாநிலம், சாம்பல்பூர் பகுதியை சேர்ந்த முன்னு பாஞ்சா என்பவரது மகள்
லட்சுமி பஹாஜன், 24; இவர், கரூர் அருகே செம்மடை பகுதியில் உள்ள
விடுதியில் தங்கி, ஜவுளி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில்
கடந்த, 3ம் தேதி இரவு ஜவுளி நிறுவனத்தில் இருந்து வெளியே சென்ற லட்சுமி
பஹாஜன், விடுதிக்கு செல்லவில்லை. மாயமாகிவிட்டார். இதுகுறித்து,
ஜவுளி நிறுவன மேலாளர் நந்தகுமார், 47, போலீசில் புகார் செய்தார்.
வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
