ADDED : நவ 05, 2026 07:00 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே புதிதாக கட்டப்பட்ட, பொது கழிப்பிடம் திறக்கப்பட்டது.
கரூர்
மாநகராட்சி, 37வது வார்டு தான்தோன்றிமலையில், 500க்கும் மேற்பட்ட
குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து
வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக, தான்தோன்றிமலை மயானம் அருகே,
பல ஆண்டுகளுக்கு முன்பு, கழிப்பிடம் கட்டப்பட்டது. நாளடைவில்
கழிப்பிடம் சேதம் அடைந்ததால், அதை அகற்றி விட்டு, துாய்மை பாரத இயக்கம்
சார்பில், 38.70 லட்ச ரூபாய் செலவில் புதிய கழிப்பிடம், சில
மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு
திறக்கப்படவில்லை.இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி
வெளியானது. இதையடுத்து, தற்போது புதிய கழிப்பிடம்
திறக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
