ADDED : நவ 05, 2026 07:00 AM
குளித்தலை:குளித்தலை தாசில்தார் அலுவலக கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.
தாசில்தார்
மதிவாணன் தலைமை வகித்து, ஆலோசனை வழங்கினார். தங்களது பகுதியில் உள்ள
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளி
கல்லுாரி, திருமண மண்டபங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கோவில்,
சர்ச், பள்ளிவாசல், கிணறு, மாநில, கிராமப்புற, தேசிய நெடுஞ்சாலை,
வேளாண் பண்ணை, கால்நடை பண்ணை, கைத்தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
உள்ளிட்டவை குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
மேலும்,
அந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைக்கோ செல்ல
வேண்டும் என்றால், எவ்வளவு கி.மீ., பதிவு செய்தல் குறித்து ஆலோசனை
வழங்கப்பட்டது.
துணை தாசில்தார்கள் நெப்போலியன், சத்தியமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
