/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.பி., தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
/
எம்.பி., தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
எம்.பி., தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
எம்.பி., தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 06, 2024 02:24 AM
கரூர்:லோக்சபா தேர்தல் பணிக்கு, முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லோக்சபா தேர்தலில், முன்னாள் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள
முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்தல்
பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம். இது குறித்து தங்கள் விருப்பத்தை துணை
இயக்குனர், முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலகம், 19ஏ. வார்னர்ஸ் ரோடு,
கன்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க
வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.