/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லஞ்சம் பெற்ற செயல் அலுவலர், உதவியாளர் கைது
/
லஞ்சம் பெற்ற செயல் அலுவலர், உதவியாளர் கைது
ADDED : ஆக 12, 2024 03:59 PM

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய ராஜகோபால் (வயது 46), பணியிட மாறுதலாக திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகம் செல்ல உள்ளார். இவரும், இவரது உதவியாளர் சிவக்குமார் (வயது 47), பூவம்பாடி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் குமரேஷ் (வயது 25) என்பவரிடம் வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார்.
அதன்படி, ரசாயனம் தடவிய நோட்டுக்களை இன்று காலை லஞ்சமாக கொடுத்தார். அப்போது ராஜகோபால், சிவக்குமார் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இன்று பணி மாறுதலாக செல்ல இருந்த நிலையில், லஞ்சம் பெற்று கைதான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.