/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீயணைப்பு நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
தீயணைப்பு நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 11, 2024 12:07 PM
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வருவாய் கோட்ட கிராமங்களில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், திருவிழா காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட, திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள், இங்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்து வருகிறது.
இங்கிருந்து, திருச்சி, கரூர் மாவட்டத்தில் அதிகபட்சம், 55 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பொது மக்கள் அழைப்புக்கு வீரர்கள் சென்று, மீட்பு பணிகள் செய்து வருகின்றனர்.குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டு விடுகிறது.
உயிர் சேதம் மற்றும் தீ விபத்தை தடுக்க கோரி, குளித்தலையை மையமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, இரண்டு சட்டசபை தொகுதி பொதுமக்கள் ஆண்ட, அ.தி.மு.க., அரசையும், தற்போது ஆளும், தி.மு.க., அரசிடமும், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், கிராம பகுதியான குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வருவாய் கோட்ட பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைப்பது என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. பொதுமக்களின், 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற எதிர்பார்த்து காத்துள்ளனர்.

