/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்ககல்பட்டி இணைப்பு சாலையில் வழிகாட்டி பலகை அமைக்க எதிர்பார்ப்பு
/
வெங்ககல்பட்டி இணைப்பு சாலையில் வழிகாட்டி பலகை அமைக்க எதிர்பார்ப்பு
வெங்ககல்பட்டி இணைப்பு சாலையில் வழிகாட்டி பலகை அமைக்க எதிர்பார்ப்பு
வெங்ககல்பட்டி இணைப்பு சாலையில் வழிகாட்டி பலகை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 01, 2024 01:27 AM
வெங்ககல்பட்டி இணைப்பு சாலையில்
வழிகாட்டி பலகை அமைக்க எதிர்பார்ப்பு
கரூர், டிச. 1-
வெங்ககல்பட்டி மேம்பாலம் பகுதியில், இணைப்பு சாலைக்கு செல்ல வழிகாட்டி பலகை இல்லாததால் விபத்து ஏற்படுகிறது.
கரூர் அருகே வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல்லுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
வெங்ககல்பட்டி மற்றும் வெள்ளியணை சாலையில் பாலத்தின் கீழ்பகுதியில், இரு புறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இணைப்பு சாலைக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற வழிகாட்டி பலகை இல்லை.
இதனால், கரூரில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியவர்கள், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருச்சி செல்ல வேண்டியவர்கள், உயர்மட்ட பாலத்தின் மேல்பகுதியில் தவறுதலாக சென்று விடுகின்றனர். எனவே, வெங்ககல்பட்டி பகுதி வெள்ளியணை சாலை பகுதியில், அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை துவங்கும் இடத்தில், வழிகாட்டி பலகைகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.