/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர் பிரிவு புதிய ரவுண்டானாவில் மின் விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 01, 2025 01:30 AM
கரூர்,கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் - வாங்கல் சாலை நெரூர் பிரிவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் பகுதிகளுக்கு, காவிரியாற்றில் கட்டப்பட்டுள்ள, உயர்மட்ட பாலங்கள் வழியாக வாகனங்களில் செல்கின்றனர்.
இந்நிலையில், நெரூர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில், மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் ரவுண்டானா வாகன ஓட்டிகளுக்கு தெரியாத நிலையில் உள்ளது. எனவே, அந்த பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், கரூர் - வாங்கல் சாலை நெரூர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில், உயர்மட்ட மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.