/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூங்கா உபகரணங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
பூங்கா உபகரணங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 23, 2025 01:50 AM
கரூர், க.பரமத்தி அருகே பராமரிப்பு இன்றி காணப்படும், பூங்காவை சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், பவுத்திரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், சிறுவர், சிறுமியர் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்யவும் தனியாக சாதனங்களும் இருந்தன. தற்போது, பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. கிராமப்பகுதியான பவுத்திரத்தில் வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாதால், பூங்காவில் பழுதான நிலையில் உள்ள, உபகரணங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.