/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்
ADDED : ஆக 24, 2025 01:09 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, விநாயகர் சிலைகளை அனுப்பும் பணி தொடங்கியது.
ஹிந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஹிந்து முன்னணி உள்பட, பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை, வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கரூர் டவுன், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம், தோகைமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 180 விநாயகர் சிலைகள் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அதற்காக கடந்த ஒரு மாதமாக, வேலாயுதம்பாளையத்தில், ஹிந்து முன்னணி சார்பில், விநாய கர் சிலைகள் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும், மூன்று நாட்களே உள்ள நிலையில், ஹிந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலைகள், நேற்று வேலாயுதம்பாளையத்தில் இருந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியது.