/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்வாயில் விழுந்துள்ள கல்லை அகற்ற எதிர்பார்ப்பு
/
கால்வாயில் விழுந்துள்ள கல்லை அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 27, 2024 09:54 AM
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, தொடங்க உள்ள நிலையில், தேரடி வீதியில், சாக்கடை கால்வாயில் விழுந்த கல்லை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும், 12ல் கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. இந்நிலையில், கம்பம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சி அனைத்துக்கும், தேரடி வீதி வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
சமீபத்தில், தேரடி வீதியில் சிறுபாலத்தில் மேல் இருந்த கல், சரிந்து சாக்கடை கால்வாயில் விழுந்து விட்டது. அதை, கரூர் மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யவில்லை. மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு இன்னும், 15 நாட்கள் உள்ள நிலையில், தேரடி தெருவில் சாக்கடை கால்வாயில் விழுந்த கல்கலை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

