sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விளக்கம்

/

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விளக்கம்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விளக்கம்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விளக்கம்


ADDED : டிச 18, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் வட்டாரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, தோட்டக்-கலை உதவி இயக்குனர் ஜெகன் விளக்கமளித்துள்ளார்.

கரூர் வட்டாரத்தில் வேட்டமங்கலம் கிழக்கு, வேட்டமங்கலம் மேற்கு, திருக்காடுதுறை, புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னைமரம், 7,900 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தென்னையில், ரூகோஸ் வெள்ளை சுருள் ஈக்கள் காணப்படு-வதால், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கரூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெகன், புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கவி-யரசு ஆகியோர் கொண்ட குழுவினர், வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தோட்டக்-கலை உதவி இயக்குனர் ஜெகன் கூறியதாவது:

சுருள் வெள்ளை ஈ தாக்குதல் தாக்கப்பட்ட இலைகளின் உள்பகு-தியில் சுருள் சுருளாக நீள் வட்ட வடிவில் முட்டைகள் காணப்-படும். இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவி கரும்பூசணம் வளர்வதால், ஓலைகள் கருப்பு நிறமாக மாறிவிடும்.

இதனால், ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு, தென்னை மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். இந்நோயை கட்டுப்படுத்த பூச்-சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள் இயற்கை எதிரிகளை அழித்து விடு-வதால் தவிர்த்தல் நன்று.

மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டு பொறிகள் இரு புறமும் விளக்கெண்ணெய் தடவப்பட்டு (நீளம் 5 அடி அகலம் 1.5 அடி) ஏக்கருக்கு, 8 என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு அல்லது தண்டுப்பகுதியில், 6 அடி உய-ரத்தில் சுற்றியும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

விசை தெளிப்பானை கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணி ஏக்க-ருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் விடலாம். 10 மரத்துக்கு ஒரு இலை துண்டு என்ற இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்-தலாம். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலின் பின் விளைவாக ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த, 1 கிலோ மைதா-மாவை, 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் பின், 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வாழை அல்லது சீத்தா மரங்களில் ஏக்கருக்கு, 20 என்ற எண்ணிக்-கையில் வளர்ப்பதால் என்கார்சியா ஒட்டுண்ணிகளின் செயல்-பாட்டை அதிகரிக்கலாம்.

இவ்வாறு, அவர், கூறினர்.






      Dinamalar
      Follow us