ADDED : அக் 21, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., கீழ் நந்தவனக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிரேசன், 25. இவர் கடந்த, 19 மதியம், 1:00 மணியளவில், குளித்தலை பெரிய பாலம் டாஸ்மாக் கடை அருகே, ராஜ்குமார் என்பவர் நடத்தி வரும் தள்ளுவண்டி பிரியாணி கடையில் சாப்பிட்டுள்ளார்.
பின், பணம் தராமல் செல்ல முற்பட்டார். அவரிடம் சாப்பிட்டதற்கான பில் தொகையை கேட்டதற்கு, கத்தி எடுத்து குத்த முற்பட்டுள்ளார். மேலும், கல்லாவில் வைத்திருந்த பணம், 2,600 ரூபாயை எடுத்துக்கொண்டார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகார்படி, கதிரேசனை, குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

