ADDED : நவ 23, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், லயன்ஸ் சங்கங்கள் சார்பில், கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி, கரூரில் நடந்தது. கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியை, டவுன் போலீஸ் டி.எஸ்.பி., செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், தேசிய மாணவர் படையினர், ஈசன் கும்மி குழுவினர், கண் தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர்.
பின், தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிறைவு விழாவில், பேரணியில் பங்கேற்றவர்களுக்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் பரிசு வழங்கினார். பார்வைக்கோர் பயண திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலை பழனியப்பன், திட்ட தலைவர் சுதா, லயன்ஸ் சங்க துணை ஆளுநர் டாக்டர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் பசுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

