/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் பகுதியில் இரவில் கவனமாக இருக்க போலீசார் அறிவுரை
/
வே.பாளையம் பகுதியில் இரவில் கவனமாக இருக்க போலீசார் அறிவுரை
வே.பாளையம் பகுதியில் இரவில் கவனமாக இருக்க போலீசார் அறிவுரை
வே.பாளையம் பகுதியில் இரவில் கவனமாக இருக்க போலீசார் அறிவுரை
ADDED : நவ 23, 2025 01:06 AM
கரூர், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், இரவு நேரத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் அறிவுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிகளில் இரவு நேரத்தில், கைகளில் உருட்டு கட்டைகளுடன், சில நபர்கள் ஜட்டியுடன் உலா வருகின்றனர். சில வீடுகளில் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவெளியில் துாங்க வேண்டாம். வீட்டின் உள்பகுதியில் தாழ்பாள் போட வேண்டும். இரவு நேரத்தில் வீட்டில் இருந்து, வெளியே வர வேண்டிய நிலை இருந்தால், தனியாக செல்ல வேண்டாம். வீட்டின் மேல் பகுதியில் கல் விழுந்தாலோ, குழாயில் தண்ணீர் வரும் சத்தம் கேட்டாலோ, வளர்ப்பு பிராணிகள் சத்தம் போட்டாலோ பொது மக்கள் வெளியே வர வேண்டாம். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், போலீஸ் அவசர எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

