/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை
/
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை
ADDED : நவ 28, 2025 02:17 AM
கரூர், நகரூர் சம்பவம் தொடர்பாக, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அதில் உயிரிழந்தவர்களின், 9 குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலக வளாக பயணியர் மாளிகையில் ஆஜராகினர். அவர்களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை
நடத்தினர்.