ADDED : நவ 17, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியம், வேளாண்மைத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், நன்னியூரில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
இதில், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் காதர்மொ-கைதீன் தலைமை வகித்து, ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் குறித்தும், தொழில்நுட்பம் குறித்தும் பேசினார். கால்நடை டாக்டர் மணிகண்டன், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விவசாயிக-ளுக்கு விளக்கமாக கூறினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உழவன் செயலி குறித்து பேசினார்.

