/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலி
/
வே.பாளையம் அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலி
ADDED : ஆக 24, 2025 01:09 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மொபட் மீது, கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் காளிமுத்து, 67, விவசாயி. இவர் கடந்த, 21ம் தேதி கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் அக்வாபால், 36, என்பவர் ஓட்டி வந்த மாருதி ஸ்விப்ட் கார், மொபட் மீது மோதியது.
அதில், கீழே விழுந்த காளிமுத்து தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளிமுத்து, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, காளிமுத்து மகள் சரோஜா, 37, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம் அக்வாபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

