/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழப்பு
/
பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழப்பு
ADDED : டிச 07, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நெரூர் வடக்கு பெரிய காளிப்பாளையம் பகு-தியை சேர்ந்தவர் கந்தசாமி, 70; விவசாயி. இவர் கடந்த, 3ல் விவ-சாய தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் ஆபத்தான நிலையில், கரூர் அரசு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து, கந்தசாமியின் மகன்
சிதம்பரம், 38, கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் வழக்குப்-பதிவு செய்து விசாரிக்கின்றனர்.