/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் மணி காய்க்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
நெல் மணி காய்க்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நெல் மணி காய்க்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நெல் மணி காய்க்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 28, 2024 03:53 AM
குளித்தலை: குளித்தலை அருகே, குறுவை சாகுபடியில் நடவு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நெல் மணி காய்க்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதில் முதல் கட்டமாக, நடவு செய்த வயல்களில் தற்போது நெற்பயிர்களில் பூட்டு பிடித்து நெல்மணிகள் காய்க்கத் தொடங்கி உள்ளது. குளித்தலை, நங்கவரம், நச்சலுார், குறிச்சி, சூரியனுார், தோகைமலை யூனியன் நெய்தலுார், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனுார், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி.மலை, புழுதேரி, வடசேரி, ஆலத்துார், பாதிரிபட்டி உட்பட, 17 பஞ்.,களில் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்து பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதேபோல் கடவூர் யூனியன் பகுதிகளில் உள்ள, 20 பஞ்.,களும் ஆழ்குழாய் கிணறுகள், குளத்து பாசன பகுதிகளாகவும் உள்ளது.
ஆண்டுதோறும் பருவ மழை முறைப்படி பெய்து வந்தால், மேற்கண்ட இடங்களில் விவசாய பணிகளில் எப்போதும் சுறுசுறுப்பு காணப்படும். ஆழ்குழாய் கிணறு உள்ள விவசாயிகள் மட்டும், சம்பா சாகுபடியை செய்தனர். இதேபோல் கடவூர் பகுதிகளிலும் போதிய மழை இல்லாமல், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கிணற்று பாசங்கள், குளத்து பாசனங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தது.
கடந்த ஆண்டு பருவமழை கணிசமான அளவில் பெய்தது. இதையடுத்து கிணற்றுப்பாசன விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்தனர். தற்போது கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் சம்பா அறுவடை முடிந்த பின்பு, குறுவை சாகுபடியை கடந்த மாதம் தொடங்கினர். இதில் அட்சய பொன்னி, கோ 51, எ.எஸ்.பி., 16, ஆடுதுறை 36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து நடவு பணிகளை தொடங்கி உள்ளனர்.
கோடை நெல் (குறுவை) மணிகள், 105 நாட்களில் இருந்து, 110 நாளில் மகசூல் பெறும் மேற்படி ரக விதை நெல், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,150 முதல், 1,300 ரூபாய் வரை தனியார் கடைகளில் பெற்று விதைத்து உள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 45 கிலோ வரை விதை நெல் தேவைப்படுகிறது. தற்போது தோகைமலை, கடவூர் யூனியன் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்த வயல்களில், நெற்பயிரில் பூட்டு பிடித்து நெல்மணிகள் காய்க்கத் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

