/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : அக் 17, 2025 01:35 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்மேற்கு பருவ மழை கடந்த மே 24ல் துவங்கியது. இம்மழை இயல்பானதாக இருந்தது. தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடங்கி உள்ளது. தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, அலுவலகம் முடிந்து வந்தவர்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர். சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதேசமயம் விவசாயிகள் மகிழ்ச்சி
யடைந்தனர்.
* கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிபட்டி, வல்லம், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, சரவணபுரம், வரகூர், கோடங்கிப்பட்டி, சிவாயம், அய்யர்மலை ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்தது. மழை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மானாவாரி பயிர்களான எள், துவரை, சோளம், உளுந்து, சூரியகாந்தி, மக்காச்சோளம் மற்றும் கிணற்று நீர் பாசன பயிர்களான நெல், மரவள்ளிக்
கிழங்கு ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது.
* நேற்று காலை முதல் மாலை வரை குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, காவல்காரன்பட்டி, நங்கவரம், நச்சலுார் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு தீவனப்புல் வளர்வதற்கு ஏதுவாக மழை பெய்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.