/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
/
அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
ADDED : ஜன 22, 2024 12:09 PM
கரூர்: கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடியில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால், அறுவடை இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சம்பா சாகுபடியும் தொடர்ந்தது. மேலும், மழையும் தொடர்ந்த நிலையில், சம்பா சாகுபடியில் பயிரிடப்பட்ட நெல் தற்போது, அறுவடை தொடங்கியுள்ளது. குறிப்பாக, காவிரியாறு பாயும் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை பஞ்சாயத்து யூனியன்கள், அமராவதி ஆறு பாயும் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், நெல் பயிர்கள் முற்றிலும் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், நெல் அறுவடை இயந்திரமும் பற்றாக்குறையாக உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
சம்பா சாகுபடி அறுவடை தொடங்கிய நிலையில், கரூர் மாவட்டத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள கூலி ஆட்கள், 100 நாள் வேலை உறுதி திட்ட பணிக்கு சென்று விடுவதால், அறுவடை பணிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. மேலும், நடப்பாண்டு தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில், சம்பா சாகுபடி பரப்பளவு முன் கூட்டியே தொடங்கியது. இதனால், பெரும்பாலான நெல் அறுவடை இயந்திரங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு சென்று விட்டது.
அந்த பகுதிகளில், நெல் அறுவடை நிறைவு பெற்ற பிறகே, கரூர் மாவட்டத்துக்கு இயந்திரங்கள் வரும் என தெரிகிறது. ஆனால் முற்றிய நெல்லை, உடனடியாக அறுவடை செய்ய ஒரு மணி நேரத்துக்கு, 3,000 ரூபாய் முதல், 3,200 வரை இயந்திரத்துக்கு வாடகை தர வேண்டிய நிலையில் உள்ளது. எனவே, அரசு சார்பில் கூடுதல் நெல் அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.