/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகிளிப்பட்டியில் விவசாய சங்க கொடியேற்று விழா
/
மகிளிப்பட்டியில் விவசாய சங்க கொடியேற்று விழா
ADDED : ஆக 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,மகிளிப்பட்டி இரட்டை வாய்க்கால் சாலை அருகில், விவசாயிகள் சங்கம் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.
மகிளிப்பட்டி கிளை செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மகிளிப்பட்டி இரட்டை வாய்க்கால் சாலை அருகில், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கொடியை, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராஜா ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல், சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், சி.பி.எம்., மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சரவணன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கவேல், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.